திங்கள், 4 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் !!

செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது.

செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில்  உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.
 
நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். செவ்வாழை பழத்தில் விட்டமின் எ உள்ளது. விட்டமின் எ கண்பார்வை திறனை அதிகரிக்க செய்யும். மாலைக்கண் ஏற்படாமல் தடுக்கும்.
 
செவ்வாழையில் உள்ள இயற்கை சர்க்கரை ஆற்றலாக மாற்றப்பட்டு, சோர்வைத் தடுத்து, உடலை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்கிறது.
 
செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
 
ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் இரண்டு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த சிவப்பு  அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.