திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் சீரக தண்ணீர் !!

ஜீரணக்கோளாறு நீங்குவதற்காக, அனைத்து வீடுகளிலும், சமையலுக்கு சீரகம் சேர்க்கப்படுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதுப்பொலிவுடன்  வைத்துக்கொள்ள சீரகம் உதவுகிறது.

முதல் நாள் இரவு ஊறவைத்த சீரகத்தை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம். அல்லது அந்த சீரக நீரைக் குடிக்கலாம். தொடர்ந்து செய்து  வந்தால் சீரற்ற மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.
 
சீரகத்தில் பொட்டாசியம் உள்ளதால் இதனை  உணவில் சேர்ப்பதால் அதன் சுவை கூடுவதோடு உடலுக்கும் வலு சேர்க்கிறது. வெறும் வயிற்றில் சீரகம் கலந்த  தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். 
 
சீரகத்தில் இருக்கும் அலெர்ஜி எதிர்ப்பு பண்பு எரிச்சல் உணர்வை போக்க வல்லது.வயிற்றில் உள்ள எரிச்சல் மற்றும் வெளிப்புண்களால் ஏற்படும் எரிச்சல்களை  தணிக்க கூடியது சீரகம்.
 
கருஞ்சீரகத்தில் ஒமேகா 9 கொழுப்பு அமிலம் உள்ளது. இது தீராத பொடுகு தொல்லையில் இருந்து நமக்கு நிவாரணத்தை தருகிறது.
 
கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம்.அது கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும்.
 
சீரகம் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. காலையில் ஒரு டம்ளர் சீரக நீர் அருந்துவதால் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்க  உதவும் என்சைம்கள் உற்பத்தியை சீரகம் தூண்டுகிறது. சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.