செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சருமத்தை இயற்கையான முறையில் பராமரிக்க உதவும் தேன்...!!

தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். பழங்காலம் தொட்டே தேனை நாம் பயன்படுத்தி வருகிறோம். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் தேனை வைத்திருப்பது அவசியம். தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். 

சரும பராமரிப்புக்கு சந்தையில் விற்கும் விலை அதிகமான பொருட்களை வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும்,  கோதுமை மாவு, சர்க்கரையும், தேனும் கூட போதும் சருமத்தை ஜொலிக்க வைக்கலாம்.
 
தேனானது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமன்றி அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக் குணமும், ஈரமாக்கும் தன்மையும், சருமத்தின் குறைபாடுகளைப் போக்கி,  அதன் இளமைத் தன்மையைப் பேணுகின்றது.
 
ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீர் உடன் தேன் கலந்து முகத்திற்கும், சருமத்திற்கும் அப்ளை செய்து ஃபேஸ்பேக் போடலாம். அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் வறட்சி நீங்கி முகம் ஜொலிக்கும்.
 
எலுமிச்சை ஜூஸ் ஒரு டீ ஸ்பூன், பால் பவுடர் ஒரு டீ ஸ்பூன், பாதாம் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து பேஸ்ட் போல வைத்துக்கொள்ளவும். சருமத்தை சாஃப்ட் ஆக்கும். வறட்சியாக உள்ள முகம், கழுத்து கைகளில் தடவி பேக் போட்டு குளிக்க சருமம் மென்மையடையும்.