ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (14:09 IST)

உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படும் சோளம் !!

Corn
வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, வைட்டமின் பி 2, வைட்டமின் பி 9, வைட்டமின் பி 12, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையாகும்.


கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், சோடியம், தாமிரம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்களும் சோளத்தில் உள்ளன. இதில், அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.

புற்றுநோயைத் தடுக்கிறது: சோளத்தில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சோளத்தை உட்கொள்ள வேண்டும்.

சோளத்தில் நல்ல அளவில் நார்ச்சத்து உள்ளது. உடல் எடையை அதிகரிக்க விரும்பும் மக்கள், சோளத்தை உட்கொள்ள வேண்டும். இதில், போதிய அளவில் கார்போஹைட்ரேட்களும் உள்ளன, இவை உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

இரத்த சோகையைத் தடுக்கிறது: சோளத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஏராளமான இரும்புச்சத்துகள் உள்ளன, இவை இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்கள் சோளத்தை தக்க அளவில் உட்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: சமையலுக்கு  பயன்படுத்தும் அனைத்து  எண்ணெய்களிலும் பைட்டோஸ்டெரால்கள் இயற்கையாகவே உள்ளன. எனினும், சோள எண்ணெயில் மற்ற எண்ணெய்களை விட அதிக அளவில் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன. பைட்டோஸ்டெரால்ஸ் சீரம் எல்.டி.எல், உடலில் சேரும்   கொழுப்பின் செறிவைக் குறைக்க உதவுகிறது.