திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (13:45 IST)

துளசி இலைகளை தினமும் சாப்பிடுவது நல்லதா...?

Tulsi
துளசிச் செடியை தினமும் பயன்படுத்துபவர்களுக்கு வயிறு, வாய், குடல், தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.


துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும். துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.

சளித்தொல்லைக்கான நிவாரணத்தையும் தன்னுள் வைத்துள்ளது துளசி. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு. துளசி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும்.

குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து விட்டு அதில் குளித்தால் உடலின் வியர்வை நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் சொரி, படைகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, மன இறுக்கம், இருமல் மற்றும் பிற தொண்டை நோய் உடையவர்கள் துளசி இலைச் சாறில்  இஞ்சி, தேன் கலந்து தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி குடித்தால் போதும். எலுமிச்சை சாறுடன் துளசி இலையை சேர்த்து நன்றாக அரைத்து தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.