செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 15 டிசம்பர் 2021 (18:16 IST)

எலும்பு மண்டலத்தை உறுதியாக்கும் சத்துக்கள் நிறைந்துள்ள செர்ரி பழம் !!

பீட்டா கரோட்டின் இளைமையை புதுப்பித்து ஆரோக்கியமான வாழ்நாளை அதிகரிக்கிறது. போலிக் அமிலம் ரத்தசோகையை தடுக்கிறது.


இப்பழத்தில் இருக்கும் போரான், இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் எலும்பு மண்டலத்தில் உறுதியாக பாதுகாக்கிறது.
 
செலினியம், குயிர் சிட்டின், ஃபிளாவோனாயிட்ஸ், எல்லசிக் அமிலம், நார் சத்து, மாவு சத்து போன்ற சத்துக்கள் உடலின் இளமையை பாதுகாக்கும். தினமும் மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டால் போதும் உடலுக்கு போதுமான வைட்டமின் சி சத்து கிடைத்துவிடும்.
 
நரம்புக் கோளாறுகள், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்க்கொள்பவர்கள் அடிக்கடி செர்ரி பழம் எடுத்துக்கொள்வது நல்லது. இது நரம்புகளில் உண்டான இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
 
செர்ரி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, எந்த ஒரு நோயும் உடலை தாக்காதவாறு ஒரு அரணாக பாதுகாத்து இருக்கும்.
 
செர்ரி பழத்தில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஈ சத்தானது கண் பார்வை குறைபாடு, கண்பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கிறது. கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி செர்ரி பழங்களை எடுத்துக்கொள்வது கண்களுக்கு நல்லது.
 
பலருக்கு தலைமுடி கொட்டுதல், பொடுகுத்தொல்லை, தலைமுடி ஈரப்பதம் இல்லாமல் போன்ற பல பிரச்சனைகளால் தலைமுடி உதிர்ந்து விடுகிறது. இதற்கு செர்ரி பழங்களை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். இதில் தலைமுடிக்கு தேவையான வைட்டமின் எ மற்றும் வைட்டமின் ஈ இருப்பதால் தலைமுடியை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.