எண்ணிலடங்க உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை மொச்சை கொட்டை பயிர் தன்னகத்தே கொண்டுள்ளது. மொச்சை கொட்டையில் வெள்ளை மொச்சை, கருப்பு மொச்சை, சிவப்பு மொச்சை, மர மொச்சை, நாட்டு மொச்சை என பல வகைகள் இருக்கின்றன. மொச்சை கொட்டை நமது உடலுக்கு தேவையான புரதம், நார் சத்துகள், மினரல்ஸ் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது. மொச்சையின் விதைகள் பச்சையாகவும், காய வைக்கப்பட்ட பிறகும் சமைத்து சாப்பிடபடுகிறது. மொச்சைக்காயைச் சாம்பாரில்...