1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (12:07 IST)

நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க உதவும் செர்ரி பழம் !!

உடலில் நரம்பு கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் அதிகம் கொண்டவார்கள் செர்ரி அதிகம் சாப்பிட்டு வருவது நல்லது.


செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் செர்ரி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகும்.

காலை மற்றும் மதிய வேளைகளில் செர்ரி பழங்களை வந்தால் உடலின் ரத்தத்தில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெற செய்து, தோளில் பளபளப்பு தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

இப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.

புற்று நோய்க்கான சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை சாப்பிட்டு வருபவர்கள், தினமும் சிறிது செர்ரி பழங்களை சாப்பிட்டு வருவதால் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.

செர்ரி பழம் இயற்கையிலேயே ரத்த ஓட்டத்தை தூண்டும் ஒரு பழம் ஆகும். எனவே இதை சாப்பிடுபவர்களின் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும்.