வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (11:09 IST)

வாயுத்தொல்லைக்கு அற்புத மருந்தாகும் சுக்கு !!

சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் கஷாயம் போல செய்து பருகி வந்தால், கடுமையான சளி இருந்தாலும் மூன்று நாட்களில் குணமாகும்.


சுக்கு சிறிது எடுத்து அதை ஒரு வெற்றிலையுடன் சேர்த்து மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்குடன் சிறிது நீர் சேர்த்து சிறிது விழுது போல அரைத்து, நெற்றியில் தடவி வந்தால் தலைவலி தீரும். சுக்குடன் சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அலர்ஜி குணமாகும்.

சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வந்தால் உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். சுக்குத் தூளை பயன்படுத்தி தேனீர் தயாரித்து தொடர்ந்து குடித்து வந்தால் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

சுக்குடன், சிறிது துளசி இலையை சேர்த்து மென்று தின்றால், தொடர்ந்து ஏற்படும் வாந்தி, குமட்டல் நிற்கும். சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு குணமாகும். குரல் இயல்பு நிலைபெறும்.

சிறிது சுக்கு எடுத்து அதை சின்ன வெங்காயத்துடன் வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் தேங்கியுள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். இதனால் மலசிக்கல் தீரும். மேலும் சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

சிறிதளவு சுக்குப் பொடியுடன் உப்பு சேர்த்து தினமும் காலையில் பல் விளக்க வேண்டும். இது நம் வாய் துர்நாற்றத்தையும், பல் கூச்சத்தையும் நீக்கும்.