வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தொண்டையில் புண் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...!!

தொண்டை அழற்சி ஏற்பட ஸ்டெப்டோகோகஸ், ஹிமோபில்ஸ் ஆகிய பாக்டீரியாக்கள் தான் காரணம். அதுபோல, அடெனோவைரஸ், எப்ஸ்டின் - பார் ஆகிய வைரஸ்கள் காரணமாக உள்ளன. இந்த பாக்டீரியா, வைரஸ்கள், அடுத்தவரிடம் இருந்தும் தொற்றும்; சில காரணங்களாலும் தொற்றும். குடும்பத்தில் உள்ள யாருக்காவது டான்சிலிட்டிஸ் இருந்தால், மற்ற சிறு வயதினருக்கும் தொற்றும்.
சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது. பெரும்பாலும் சாதாரண சளியை உண்டு பண்ணும் வைரஸ் கிருமியால்தான் அதிகமான தொண்டைப் புண் உண்டாகிறது. சில வேளைகளில் பேக்டீரியா கிருமிகளாலும் இது உண்டாகலாம். 
 
தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் தடவ குறையும். பாதாம் பருப்பை  அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் குறையும்.
 
தொண்டை வலி ஏற்படும்போது மா இலைகளை தணலில் இட்டு வெளிவரும் புகையை சுவாசித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
 
வேப்பம் பூவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்து வந்தால் தொண்டையில் ஏற்படும்  புண் குறையும்.
 
குரல்வளையில் ஏற்படும் வைரஸ் தொற்று நோயில் தொண்டைக் கரகரப்பு, பேசுவதில் சிரமம், குரல் மாற்றம் போன்றவற்றோடு தொண்டை வலியும் சேர்ந்து வரலாம். தொண்டைப் புண் சிறு பிள்ளைகளுக்கு எளிதில் ஏற்படும் ஒரு நோயாகும்.
 
4 பூண்டு பல் இடித்து கூழாக்கி 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும். இஞ்சியை தோல் நீக்கி கழுவி சிறிதளவு எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
 
சித்தரத்தையை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண்  குறையும்.
 
1 தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து 1 டம்ளர் நீர் விட்டு சிறிது சூடேற்றி எடுத்து அதில் சிறிது தேன் கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.