மூட்டுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...!!

Arthritis
Sasikala|
நாம் அழைக்காமல் வந்து விடும் நோய்களில் மிக முக்கியமானது மூட்டுவலி. மூட்டு வலி ஆண், பெண் என்ற பாகுபாடின்றி இரண்டு தரப்பாரையும் தாக்கும் தன்மை கொண்டது.
நமது உடலில் 206 எலும்புகள் உள்ளன. இவ்வெலும்புகளை ஒன்றுடன் ஒன்று இணைத்திருப்பது மூட்டுகள்தான். மூட்டுகளில் இரண்டு வகை உண்டு. அசையும் மூட்டுகள், அசையா மூட்டுகள்.
 
அசையா மூட்டுகளைப் பொருத்தவரை பிரச்சனையில்லை. ஏனென்றால் அதில் எந்தவிதமான வலியும் தோன்றுவதில்லை. பெரும்பாலும்  அசையும் மூட்டுகள்தான் இந்த வலித் தொல்லையைத் தோற்றுவிப்பவை. 
 
மூட்டுவலி என்றால் மூட்டுகளில் ஒருவிதமான வலி இருக்கும். மூட்டுகளில் `அழற்சி' ஏற்பட்டிருக்குமாயின் வலி மற்றும் மூட்டுகள் உள்ள மேல் தோல் பகுதி சிவந்து காணப்படும். அந்தப் பகுதியில் கை வைத்துப் பார்த்தாலே வெதுவெதுப்பான வெப்பமான உணர்வு இருக்கும். இது  தவிர மூட்டை அசைக்கும்போது அதிகமான வலி இருக்கும்.
 
மூட்டுவலி தோன்றுவதற்கு முக்கிய காரணம் மூட்டுகளில் தோன்றும் அழற்சியே. மற்றும் மூட்டுகள் எளிதில் அசைய அம்மூட்டுகளில் பசை போன்ற திரவம் இயற்கையாகவே சுரக்கும். இத்திரவம் எஞ்சினுக்கு கிரீஸ் மற்றும் ஆயில் எப்படி உதவுகிறதோ அதைப்போல உதவி,  மூட்டுகளின் சிரமத்தை இலகுவாக்குகிறது. இதனால் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்கின்றன. இத்திரவம் குறையுமேயானால் எலும்புகள் நேரடியாக உரச ஆரம்பித்து மூட்டுகள் தேய்ந்துவிடவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த மூட்டுவாத நோய் தோன்றுகிறது. இதனால் வலி தாங்க  முடியாத அளவிற்கு ஏற்படுகிறது.
 
மூட்டுவலியைத் தடுக்க, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நடைபயிற்சி மூட்டுகளில் திரவத்தை சுரக்கச் செய்து மூட்டுகளை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும்.
 
உணவில் உப்புக் குறைவாக அல்லது சரியாகச் சேர்த்துக் கொள்ளுதல் மூட்டைப் பாதுகாக்கும். கீரை காய்கறிகள் மூட்டுகளைப்  பலமானதாக்கும்.
 
அளவிற்கு அதிகமான மாத்திரைகள் அல்லது முறையான ஆலோசனையில்லாத மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். காலையில் 15-லிருந்து 20  நிமிடம் மூட்டுகளுக்கென பயிற்சி செய்வது நல்ல பலனை தரும்.


இதில் மேலும் படிக்கவும் :