புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

மூட்டுவலி வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்...!

உங்களது உடலின் மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்று மூட்டு. உங்களது உடலின் ஒட்டுமொத்த எடையையும் தாங்கக்கூடிய சுமைதாங்கியாக உள்ளது. உங்களது உடல் இயக்கங்கள் அனைத்திலும் அதன் பங்கு முக்கியமானது. 
மூட்டுகள் எலும்புகள், தசைநார்கள், குறுத்தெலும்புகள், தசை நாண்கள் என 4 பகுதிகளால் ஆனது. இதில் தொடை எலும்பு, கால் முன்னெலும்பு, முழங்காலில் உள்ள வட்டவடிவ எலும்புகள் போன்றவை இருக்கும்.
 
காரணங்கள்: எல்லா வயதினரையும் பாதிக்கிற பரவலான பிரச்னைகளில் ஒன்று மூட்டு வலி. அடிபட்டதன் காரணமாகவோ, தசைநார்கள் அல்லது குறுத்தெலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலோ மூட்டு வலி வரலாம். கீல்வாதம் மற்றும் தொற்றுக்களின் காரணமாகவும் மூட்டு வலி  வரலாம்.
அறிகுறிகள்: வீக்கம் மற்றும் விறைப்புத் தன்மை, சிவந்து போவது, தொட்டால் அந்த இடம் சூடாக இருப்பது, பலவீனமாக உணர்வது, மூட்டுக்களில் வித்தியாசமான சத்தங்களை உணர்வது, மூட்டுக்களை முழுவதுமாக நீட்டி, மடக்க முடியாதது, மூட்டு வலிக்கான காரணங்களை  அடிபடுதல், மெக்கானிக்கல், கீல்வாதம் மற்றும் பிற பிரச்னைகள் என பிரிக்கலாம்.
 
மூட்டுகளில் அடிபடும்போது அது தசைநார்கள், குருத்தெலும்பு, மூட்டு இணைப்பு மற்றும் எலும்புகளை சுற்றியுள்ள திரவம் நிறைந்த பகுதி என எதை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.
 
உடல் பருமனைத் தவிர்க்க, அதிக பருமனுடன் இருப்பவர்களுக்கு உடலின் எடையானது மூட்டுக்களை அழுத்தி வலியை ஏற்படுத்தும். எனவே உடல் எடையை அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.