1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

செரிமான கோளாறுகளை சரிசெய்யும் காலிஃபிளவர் !!

காலிஃபிளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து இதய நோய் வரமால் காக்கிறது. மேலும் செரிமான கோளாறுகளை சரிசெய்யும் தன்மை இதற்கு உண்டு.

காலிஃபிளவரில் கோலைன் என்னும் வேதிப்பொருள் அதிகம் உள்ளதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை 
 
காலிஃபிளவரில் பீட்டா- கரோட்டின், குவர்செட்டின், சின்னமிக் அமிலம், பீட்டா கிரிப்டோசேந்தின் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் இதை தொடர்ந்து  சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள பியூரின் என்ற வேதிப்பொருள் மூட்டுவலி, வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும்.
 
காலிஃபிளவரில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் லெப்டின் எனப்படும் வேதிப்பொருளை சுரக்கச் செய்து,உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது.
 
காலிஃபிளவரில் சல்போரபேன் சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல்  காக்கிறது.
 
காலிஃபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. அதேபோல் இது மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகமாக உள்ளன.  தினமும் 90 கிராம் அளவுக்கு காலிஃபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது.
 
மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புச்சக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.