1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம் !!

கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். கஸ்தூரி மஞ்சள் நுண்கிருமிகளை அழிக்க கூடியது. வாயில் ஏற்படும்  புண்களை ஆற்றும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: அகத்திக்கீரை, நல்லெண்ணெய். 

செய்முறை: அகத்திக்கீரையை நசுக்கி நல்லெண்ணெய்யில் இட்டு காய்ச்சி எடுக்கவும். இதிலிருந்து ஒரு ஸ்பூன் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வயிறு,  வாய்ப்புண் சரியாகும்.
 
கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி தசைவலி, மூட்டுவலிக்கான மேல்பற்று மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய், கஸ்தூரி மஞ்சள். 
 
செய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் விட்டு சூடு செய்யவும். இதில், கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலக்கவும். இதை மேல்பற்றாக பூசிவர தசை வலி, மூட்டுவலி, வீக்கம் சரியாகும்.
 
கஸ்தூரி மஞ்சளை கொண்டு நீர்க்கோவை, தலைபாரத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், சுண்ணாம்பு. செய்முறை:  சிறிது கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு, சிறிது சுண்ணாம்பு சேர்க்கவும்.
 
கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி குடல் புண்களை ஆற்றும், வயிற்றுப்போக்கை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள்,  தயிர். 
 
செய்முறை: 2 ஸ்பூன் தயிர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர அல்சர்  குணமாகும்.