1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முள் சீத்தாப்பழத்தில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளது தெரியுமா...?

முள் சீத்தாவின் இலைகள், பட்டைகள், மரம், பழம், விதை, வேர் என எல்லாப் பாகங்களும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. 

முள் சீத்தா பழத்தில் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.
 
முள் சீத்தாபழத்தில் அதிகப்படியான பொட்டாசியம் உள்ளது. இது இதய நோய் பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கும். உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்கி  இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்கிறது. இந்த முள் சீத்தா இலைகளை டீ போட்டு குடித்து வந்தால் இதயம் சார்ந்த கோளாறுகளை  தடுக்க முடியும்.
 
கிட்டத்தட்ட 12 வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் வல்லமையும் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது. அத்துடன் புற்றுநோயால் உருவாகும் கட்டிகளை  கரைத்தல், கர்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்பனவற்றை குணப்படுத்துவதுடன், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் போன்ற உடலுறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்கும் ஆற்றலும் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது.
 
இரத்த அழுத்தம், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குடல் புண், ஈரல் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம், இருதய கோளாறு, கிட்னி பாதிப்பு, இருமல் போன்ற பல்வேறு நோய்களையும் தீர்க்கும் உன்னதமான மருந்தாகவும், இயற்கையின் கொடையாகவும் முள்சீத்தாப்பழம் திகழ்கின்றது.
 
முள் சீத்தாப்பழம் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரித்து உடலினை நாள்பட்ட நோய்கள், தொற்று நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.