வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல்வேறு பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் விளக்கெண்ணெய்...!!

தினமும் சில துளிகள் விளக்கெண்ணெய்யை உடலின் அனைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் வலி ஏற்படுவது நீங்கும்.


விளக்கெண்ணெய்யின் சில துளிகளை சொறி, சிரங்கு, அரிப்பு ஏற்பட்ட இடங்களின் மீது விட்டு நன்கு தடவி வந்தால் இப்பிரச்சினைகள் விரைவில் நீங்கும்.
 
விளக்கெண்ணெய்யின் சில துளிகளை வீக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, அந்த இடத்தின் மீது ஒத்தடம் கொடுக்க வீக்கம் விரைவில் குறையும்.
 
விளக்கெண்ணெய்யின் சில துளிகளை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலை முடிக்கு தேய்த்து வந்தால் தலை முடி உதிர்வது நிற்கும். மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளும் தீரும்.
 
உடலின் எப்பகுதியிலாவது சிராய்ப்புகள், வெட்டுக்கள் போன்றவை ஏற்பட்டால் அந்த இடத்தில் ரத்த கசிவு ஏற்பட்டு சிறிது நேரத்தில் நின்றாலும் நாளாவட்டத்தில்  அந்த இடம் புண்ணாகி விடுகிறது. விளக்கெண்ணெய்யின் சில துளிகளை தினமும் அடிபட்ட புண்களின் மீது விட்டு வந்தால் புண்கள் விரைவில் குணமாகும்.
 
மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது.
 
உடலில் பித்த தன்மை அதிகமாகும் நபர்களுக்கு பாத வெடிப்புகள் அதிகம் ஏற்படும். இதற்கு தினமும் உறங்க செல்லும் முன்பு விளக்கெண்ணெய்யின் சில துளிகளை பாத வெடிப்புகளின் மீது தடவி வந்தால் விரைவில் பாத வெடிப்புகள் நீங்கும்.