1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Are there so many Nutrients in the easily available Drumsticks...?

எளிதில் கிடைக்கும் முருங்கைக்காயில் இத்தனை சத்துக்களா....?

முருங்கைக்காய்
முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கைக் காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.

* வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும். கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 
* குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும். முருங்கைக்காயில் ஜிங்க் சத்து அதிகம்  காணப்படுகிறது. 
 
* முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் நிவர்த்தியாகின்றன.
 
* முருங்கைக்காயானது தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றைகுணப்படுத்துகிறது. முருங்கைக்காய் தோல் புற்றுநோய், கல்லீரல்  புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.
 
* முருங்கைகாயில் செரோடோனின், டோபமைன் மற்றும் நோரர்டேன்லைன் போன்றவை உள்ளன. இவை நினைவாற்றல், மனநிலை மற்றும் உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
உலர் பழங்களில் நிறைந்துள்ள சத்துக்களும் பயன்களும் !!