ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இயற்கையாகவே பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ள ஆமணக்கு எண்ணெய் !!

ஆமணக்கு எண்ணெய்யை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். இயற்கையாகவே பல்வேறு மருத்துவ குணங்கள் இதில் நிரம்பி உள்ளது. 

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்து ஹேர் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதை விட, விளக்கெண்ணெயை தலைக்கு குளிக்கும் முன் 15 நிமிடம் ஊற வைத்து, பின்  மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, நல்ல கண்டிஷனர் போட்டது போல் இருக்கும்.
 
1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை எடுத்து கொண்ட அதை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். இதை அரை மணி நேரம் சென்று கழுவி விடலாம். இந்த முறையை 1 நாளைக்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் இளமையை அப்படியே பாதுகாக்கலாம்.
 
1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கழுவவும். இந்த  குறிப்பை தினமும் 1 முறையாவது செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைந்து, இளமை தோற்றம் நீடிக்கும்.
 
1 ஸ்பூன் பன்னீரை எடுத்து கொண்டு அதனை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் சுருக்கங்கள் மருந்து இளமையை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள்.
 
1 ஸ்பூன் மஞ்சளை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவி சிறப்பான முறையில் மசாஜ் கொடுக்கவும். அதன் பின்னர் 15 நிமிடம் கழித்து  முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு உங்களின் முகத்தை பொலிவாக்கத்துவதுடன், இளமையாகவும் வைத்து கொள்ளும்.