புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (15:13 IST)

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் முந்திரி !!

முந்திரி பருப்பில் மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதில் முந்திரி முக்கிய பங்கு வகிக்கிறது.


முந்திரியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் அதை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது நார்ச்சத்து அளவை அதிகரித்துவிடும். முந்திரியில் சோடியம் அதிகளவு இருப்பதால் அதனை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. அவ்வாறு சாப்பிடுவதால் சோடியத்தை அளவை அதிகரித்துவிடும்.

தினமும் சிறிதளவு முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் செரிமானம் போன்ற ஜீரண மண்டல செயல்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. முந்திரிப்பருப்பில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. ஒலிக் அமிலம் மற்றும் பல்மிடிக் அமிலம் இவை இரண்டும் தான் உடலுக்கு தேவையான முக்கியமான இரண்டு நார்ச்சத்துக்கள். இவை முந்திரி பருப்பில் இருக்கின்றன.

அளவான முறையில் முந்திரிப்பருப்பை சாப்பிடுவதால் உடல் எடை குறைவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. முந்திரி பருப்பை சாப்பிடுவதால் நமது உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் பலன் அடைகின்றன.

முந்திரியை நன்கு மென்று உண்பதால் உமிழ் நீர் சுரக்கிறது. இதனால் பற்களை கெடுக்கும் பற்குழிகளை உருவாக்கும் பேக்டீரியாக்கள் சமநிலைப்படுத்தப்படுகிறது. மேலும் முந்திரி பருப்புகளை மெல்வதால் ஈறுகள் வலுப்படுகின்றன.