ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (10:03 IST)

அற்புதமாக நோய்களுக்கு நிவாரணியாக செயல்படும் ஏலக்காய் !!

இயற்கையான நோய் நிவாரணியான ஏலக்காய் மனதிற்கும் இதயத்திற்கும் தெளிவையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது. காபி போன்றவை  ஏற்படுத்தும் அமிலத் தன்மையைக் குறைத்து, பால் ஏற்படுத்தும் சளித்தன்மையையும் சமப்படுத்துகிறது.


ஏலக்காய் வயிற்று பகுதியிலும் நுரையீரல்களிலும் ஏற்படும் அதிகப் படியான கபத்தை நீக்கி விடுகிறது. காபியிலும் இரவு நேரம் பாலிலும் ஏலக்காய் பொடி அல்லது ஏலக்காய் தொற்றுக்களைக் கலந்து காய்ச்சிக் குடிக்கலாம்.

அஜீரணக் கோளாறு, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றுக்கு இது சிறந்த தீர்வைத் தரும். உணவை எளிதில் செரிக்க உதவும். உயர் ரத்த அழுத்தம் இருக்கும் நோயாளிகள் தினமும் இதைச் சிறிது சாப்பிட்டு வந்தால், நுரையீரலுக்குச் செல்லும் ரத்தம் சீராகும். இதனால் ரத்த அழுத்தம் விரைவில் குறையும்.

ஏலக்காயில் இருக்கும் ஊட்டச் சத்துகள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாகப் பயன்படுகின்றன. இவை உடலில் இருக்கும் செல்கள் முதிர்ச்சி அடைவதைத் தடுத்து இளமையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.

ஏலக்காய் தேநீர் மன அழுத்தத்துக்கு நல்லது எனப் பரிந்துரைக்கிறது. இது, இயற்கையாக நச்சுத்தன்மையை நீக்கி, செல்களை மீண்டும் பொலிவுபெறச் செய்வதாலும் மனஅழுத்தம் குறையும். மேலும் இதில் காரத்தன்மை இருப்பதால், சளி மற்றும் காய்ச்சலைத்  தடுத்துவிடக்கூடியது. ஒரு ஏலக்காய் டீ குடித்தால் சளி, காய்ச்சல் பறந்துவிடும்.

வாய் துர்நாற்றத்தையும் சரிசெய்யக்கூடியது இது. வாய்ப்புண்ணையும் சரிசெய்யும். இரண்டு ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு மென்றாலே துர்நாற்றம் நீங்கிவிடும். மேலும் ஆஸ்துமா இருக்கும் நோயாளிகளுக்கு இது மிகுந்த பயனைத் தரும். கக்குவான் இருமலுக்கும் மார்புச் சளிக்கும் நல்ல மருந்து.