1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:47 IST)

மாதுளை இலையில் உள்ள மகத்தான மருத்துவ குறிப்புகள் !!

Pomegranate flower
மாதுளையில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுபவை. மேலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது என்பதால் நோய் எதிர்ப்பு தொடர்பான கோளாறுகளைச் சீர்செய்கிறது.


இருமல் சளி தொண்டையிலுள்ள நோய்த் தொற்று முதலானவற்றைக் குணமாக்க, மாதுளை இலைகளை கொண்டு காபி தயாரித்து பருகலாம். ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். இலைகள் நன்கு வெந்ததும் அதனை வடிகட்டி தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் இருமல் சளிப் பிரச்சினை தீரும்.

தூக்கமின்மைப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை விழுதாக அரைத்து 200 மிலி தண்ணீரில் கலந்து கொதிக்க விட்டு அந்நீர் 50மிலி குறையும் வரை கொதிக்கவைத்து, பின் இதனை வடிகட்டி இரவில் தூங்குவதற்கு முன்பு பருகி வந்தால் ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்.

பருக்கள் மீது மாதுளை இலையை சாறாக்கிப்பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தொப்பையைக் குறைக்க உதவுகிறது. கட்டுடல் அழகை பேண மாதுளை இலை சாற்றைப் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

செரிமானப் பிரச்சினையைச் சீர்செய்ய மாதுளை இலைகளை மருந்தாக உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் செரிமானத்தை தூண்ட உதவுகிறது. இதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் நீங்கும். இந்த பிரச்சினைகளுக்கு மாதுளை இலைகளை தேநீராக தயாரித்து பருகலாம்.