திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சிறுதானியங்களை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்...!

சிறுதானியங்களை அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ளை டிரைகிளிசரைடுகளின் அளவினைக் குறைக்க உதவி செய்கிறது. சிறுதானியங்கள் இரத்தத்  தட்டை அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது.
சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்படும் லிக்னைன் மார்பகப் புற்று  நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. 
 
சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது.
 
குடல்களில் உணவு செல்லும் காலத்தை எளிதில் கரையாத நார்ச்சத்து அதிகப்படுத்துகிறது. மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாகுவதற்குக் காரணமான பித்த அமிலங்களின் சுரப்பைக் குறைக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்கள் உணவில் சிறுதானியங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
 
அதிக அளவு சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் சருமத்தை மேலும் இளமையுடனும் மிருதுவான தோற்றத்துடனும் விளங்கச் செய்யும் செல்களைப்  பாதுகாக்கின்றன.