திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பேரீச்சம் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களும் பயன்களும்...!

பேரீச்சம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண்பார்வை குறைவுக்கு சிறந்ததாக உள்ளது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம்பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.
இதில் உள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துகள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. நரம்பு மண்டலச் செயல்பாட்டை அதிகரிக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவும். ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது.
 
பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு கால்சியம் சத்தும், இரும்புச்சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை சீராக்கவும் பேரீச்சம்பழம் மருந்தாகிறது.
 
பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. கரையக்கூடியது. இது செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.
பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கை, கால் தளர்ச்சி  குணமாகும்.
 
பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.