செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (10:00 IST)

அடிக்கடி உணவில் வெந்தயத்தினை எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் !!

வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் அடிக்கடி உணவில் வெந்தயத்தினை எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு படிவதைத் தடுத்து பிற்காலத்தில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.

வெந்தயத்தில் உள்ள மருத்துவகுணம் வெந்தயத்தை ஊறவைத்த நீரையோ அல்லது வெந்தயத்தை வேக வைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும். சிறுநீர் கடுப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.
 
வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் ஜுரம் மற்றும் நெடுநாட்கள் மருத்துவமனையில் இருந்தவர்கள் பல மருந்துகளை உட்கொண்டு அவர்களின் உணவு குழாய் மற்றும் ஜீரண உறுப்புகளில் புண்கள் ஏற்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் அரிசி கஞ்சியில் சிறிது வேக வைத்த வெந்தயத்தை கலந்து உட்கொண்டு வரலாம். இதனால் உடல் பலம் பெறும் வயிற்றுப் புண் குணமடையும்.
 
வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் தலைமுடி உச்சந்தலை வெளிப்புற சீ தோஷங்களிலிருந்து காக்கிறது ஆனால் இன்று பலருக்கும் தலைமுடி உதிர்ந்து ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. நீரில் ஊறிய சிறிது வெந்தயத்தை பசும் தயிரில் கலந்து அரைத்து தலையில் நன்றாக தேய்த்து ஊறவைத்து சிறிது நேரத்திற்குப் பின்பு தலைக்கு குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்துவர முடி உதிர்வு பிரச்சனைகள் நீங்கும். கூந்தலும் மென்மையாக வளரும்.
 
வெந்தயத்தில் உள்ள மருத்துவகுணம் புதியதாக குழந்தை பெற்ற  தாய்மார்கள்   சிலருக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சினைகள் உள்ளன.  இதற்கு அந்த பெண்கள் தினமும் வெந்தயத்தை இரண்டு வேளை உணவில் உட்கொண்டுவர தாய்ப்பால் நன்கு சுரக்கும். அந்த தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். வெந்தயத்தில் உள்ள பல இயற்கை வேதிப்பொருட்கள் புற்றுநோய் செல்களை உருவாகாமல் தடுக்க வல்லது.