ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (15:57 IST)

ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கொத்தமல்லி !!

கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள். கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. 

கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது. வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் போன்ற வயிற்று கோளாறுகளுக்கு கொத்தமல்லி மருந்தாகப் பயன்படும்.
 
கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லியை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். எனவே அளவோடு சாப்பிடுவது மிகவும் நல்லது.
 
கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது. இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது. இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும். இக்கீரையை எண்ணெய்யில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும். 
 
கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும். பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும். முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.
 
கொத்தமல்லி சாறு கடுமையான வயிற்று வலி மற்றும் அஜீரண கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது.
 
கர்ப்பிணிகள் கர்ப்பமான மாதத்தில் இருந்து கொத்தமல்லியை உணவில் சேர்த்து கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தையானது ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதி அடையும்.