1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (09:47 IST)

தினமும் சிறிதளவு திராட்சை பழத்தை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்...?

திராட்சைப்பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.ஒரு சிலருக்கு காலைக்கடன்களை கழிப்பதில் சிரமம் ஏற்படுகின்றது.திராட்சை நீர்சத்து அதிகம் நிறைந்தது. எனவே இது உடலில் ஏற்படக்கூடிய நீர் வறட்சியை போக்கும்.

நாம் தினசரி சாப்பிடுகின்ற உணவு வகைகளில் மற்றும் சமையலுக்கு பயன் படுத்துகின்ற எண்ணெய்களில் கொழுப்பு சத்து அதிக அளவில் உள்ளது. திராட்சை பழத்தை தினசரி சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பு அதிக அளவில் சேராமல் பாதுகாக்கிறது.
 
பொட்டாசியம் சத்து இதில் அதிக அளவில் உள்ளது. எனவே இந்த பொட்டாசியம் உடலில் ஓடுகின்ற ரத்த அழுத்தத்தினை சீராக்குகிறது. மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
 
திராட்சைப்பழம் கண்களின் கரு விழிகளில் உள்ள செல்கள் வளர்ச்சியை அதிகரிக்கிறது. எனவே கண் பார்வை தெளிவாகும். மேலும் இது கண் அழுத்தம் சம்பந்தமான நோய்கள் கண்களில் புரை ஏற்படுவது போன்றவற்றை போக்குகிறது.
 
தொற்று நோயினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். நுண் கிருமிகள் வைரஸ் பாக்டீரியா போன்றவற்றை அழிக்கும் திறன் திராட்சைப் பழத்துக்கு உள்ளது. எனவே தினம்தோறும் திராட்சை பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
திராட்சைபழத்தினை அப்படியே சாப்பிடுவதாலும் மற்றும் இதனை நன்கு காயவைத்து உலர்திராட்சையாக சாப்பிடுவதாலும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.
 
நமது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கு சிறுநீரகம் உதவுகிறது. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடல் நலத்துடன் இருக்க முடியும்.