செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (12:58 IST)

மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் !!

இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் இதர தாதுக்கள் மணத்தக்காளி கீரையில் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.


உடல் சூட்டை தணிக்க நினைப்பவர்கள் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வர, உடல் சூடு தணியும்.

தொண்டை கட்டு, வீக்கம் மற்றும் தொண்டை புண் உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். எனவே வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கட்டு, வீக்கம் மற்றும் தொண்டை புண் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வயிற்றுபுண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுபுண் மட்டுமின்றி, வாய்ப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வயிற்றுபுண் உள்ளவர்களுக்கு வாய்ப்புண்ணும் இருக்கும்.

மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மற்றும் இதர கல்லீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காண மணத்தக்காளி செடியின் இலைகளை தண்ணீரில் வேகவைத்து அருந்துவது பெரிதும் உதவியாக இருக்கும்.

மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை பெருக்கி, உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றும்.