1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Benefits of Nutritious Kuthiraivali Rice !!

ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியின் நன்மைகள் !!

Samai Rice
குதிரைவாலியில் ஊட்டச்சத்துகள் மிகுந்த நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. இது உடலில் உள்ள மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. நெல் போன்ற பயிர்கள் விளையாத நிலங்களில் இவை அதிகமாகப் பயிரிடப்படுகிறது.


ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை வெளியிடுவதற்கு பெரிது உதவுகிறது. நோயளிகள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவாக பயன்பட்டு வருகிறது.

குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் உள்ளிடவற்றை குணப்படுத்துகிறது.

அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடவேண்டும். தினமும் சாப்பிட்டு வந்தால் சளி, காய்ச்சல் ஏற்படாமல் இருக்கும்.

உடல் உறுப்புகளை தூய்மையாக்க பெரிதும் பயன்படுகிறது. நல்ல ஆண்டி ஆக்சிடன்னாக செயல்படுகிறது. செரிமான பிரச்சனைகள், ரத்த சோகை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. மேலும் சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள தேவையில்லாத உப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. சிறுநீரை அதிகமாக பெருக செய்கிறது. மேலும் கண் சார்ந்த அனைத்து பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய பீட்டா கரோட்டின் குதிரைவாலியில் அதிகமாக உள்ளது.

செரிமானத்தின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
எளிய இயற்கை வைத்திய குறிப்புகளும் பயன்களும் !!