வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 23 மே 2022 (10:08 IST)

இயற்கை முறையிலான சில பயன்தரும் மருத்துவ குறிப்புகள் !!

Health Tips
புளிய மரத்து சொற சொறப்பு பட்டையை பட்டுபோல் பொடி செய்து புண் மேல் தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வர ஒரு வாரத்தில் புண் ஆறிவிடும்.


அத்திபால் தடவ தீப்புண் ஆறும். உடலில் தீக்காயம் ஏற்பட்டால் 30 மில்லி தேங்காய் எண்ணையுடன், 50 மில்லி சுண்ணாம்பில் ஊற்றிய தெளிந்த நீரை கலந்து தீப்புண் மீது தடவி வர குணமாகும்.

வேப்பங்கொழுந்தை மோர்விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது தடவ புண் குணமாகும். வீட்டில் உள்ள காப்பி டிக்காஷனை தீப்புண் உள்ள இடத்தில் தடவி வர இப்புண் காயம் விரைவில் ஆறும்.

மருக்கொழுந்து செடியினைப் பறித்து வேரை நீக்கி விட்டு சுத்தம் செய்து நல்லெண்ணெய் கலந்து வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு தீப்புண் மீது தடவி வர குணமாகும்.

உடலில் தீக்காயங்கள் ஏற்ப்பட்டால் தேங்காய் எண்ணெய் தீப்புண் மீது தடவி வந்தால் தீப்புண் ஆறும். செம்பருத்தி இலை, பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்து தீப்பட்ட புண்ணின் மீது பூசி வந்தால் தீப்பட்ட புண்ணில் ஏற்படும் எரிச்சல், காந்தல் குறையும்.

வேப்பங்கொழுந்து, ஆமணக்கு இலை இரண்டையும் அரைத்து தீப்புண்ணில் வைத்து தினமும் கட்டி வர தீப்புண் ஆறும். 30 மில்லி தேங்காய் எண்ணெயுடன், 50 மில்லி தெளிந்த சுண்ணாம்பு நீரைக் கலந்து தீப்புண்ணின் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்.

வேப்பம் பட்டையை இடித்து கசாயமாக காய்ச்சி ஆறிய பிறகு பாட்டிலில் வைத்து குலுக்கி திப்புண் வடுமீது தடவி வர குணமாகும்.