1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (17:12 IST)

அன்றாட உணவில் அவரைக்காயை சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள் !!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய அவரைக்காய்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது நல்லது.


அவரைக்காய் சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ள அவரைக்காய்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.

வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.

அவரைக்காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. இது உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது.

அவரைக்காய்களில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன. எனவே அவரைக்காய் அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்.

அவரைக்காயில் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது.