திங்கள், 11 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (13:40 IST)

வரகரிசியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகளும் அதன் பயன்களும் !!

புரதச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, மினரல்ஸ், கொழுப்புச்சத்து, கால்சியம் பாஸ்பரஸ், இரும்புசத்து, தையமின், நையஸின் போன்ற சத்துக்கள் வரகில் மிகுதியாக உள்ளது.


மேலும் தாது உப்புக்கள், இரும்பு சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை மிகவும் அத்தியாவசியமாகும். மேற்கண்ட இந்த சத்துக்கள் யாவும் வரகரிசியில் நிறைந்துள்ளது.

வரகரிசியை சாப்பிடுவதால் ரத்தத்தில் ஊட்டச்சத்துகள் அதிகரிக்கும். இது ரத்தத்தை தூய்மைப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மிகவும் அதிகம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நமது உடல் இயற்கையிலேயே இன்சுலின்ஐ சுரக்கும். வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

வரகரிசி பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் குறைவின்றி கிடைக்கும்.