பேரிக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

Sasikala|
அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக் கூடியது. பேரிக்காய் பழத் தோலில் அதிக அளவு உள்ள தாவர ஊட்டச்  சத்துகள் புற்றுநோய் மற்றும் இதய நோயை குணப்படுத்துகிறது.

இதை அடிக்கடி உண்ணும்போது நல்ல பசியும் எடுக்கும். ஜீரணமும் நன்றாக ஆகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.
 
திடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கும்.
 
மன உறுதியும், மனத்தெம்பும் ஏற்படும். சிறுவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் இது. அவர்கள் எலும்புகளும், பற்களும் பலமாக இருக்கவும் பல நோய்கள்  வராமல் இருக்கவும் பேரிக்காய் துணை செய்யும்.
 
கர்ப்பிணிகளுக்கு பேரிக்காயைச் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல திடமாக, ஆரோக்கியமாக இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பேரிக்காய்  நல்ல நண்பன். தாய்மார்கள் அடிக்கடி சாப்பிட்டால் தேவையான பால் சுரக்கும்.
 
பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இரு வேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.
 
புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை  அகற்றுகிறது. இதில் வைட்டமின் சி செறிந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :