எளிதில் கிடைக்கும் கரிசலாங்கண்ணி கீரையில் இத்தனை சத்துக்கள் உள்ளதா...?

Sasikala|
கரிசலாங்கண்ணி கீரை வயல் வரப்புகளிலும், வயக்கால் ஓரங்களிலும் மற்றும் நீர்ப்பிடிப்புள்ள இடங்களிலும் வளரக்கூடியது. இச்செடியின் காம்புகள் சிவப்பாக இருக்கும். இலைகள் சுரசுரப்பாகவும் நீண்டும் காணப்படும். இதன் பூக்கள் வெள்ளையாக இருக்கும்.
 

கரிசலாங்கண்ணி கீரையை துவையலாகவும், பருப்புடன் சேர்த்து கூட்டாகவும் செய்து சாப்பிடலாம். இக்கீரை கல்லீரலுக்கு அதிக சக்தியை கொடுக்க கூடியது.  கரிசலாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் பிரகாசம் அடையும் மற்றும் கண்களுக்கும் மூளைக்கும் நல்ல குளிர்ச்சியை தரும். 
 
கரிசலாங்கண்ணி கீரை சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் புண்கள் மற்றும் அடிபட்ட இடத்தில் இந்த கீரையின் இலையை அரைத்து அதன் மேல் தடவி வர நல்ல பலனை காணலாம். குழந்தைளின் சளிக்கு இந்த கீரை சிறந்து மருந்தாக பயன்டுகிறது.
 
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு இந்த கீரையின் இலையை பச்சையாக இடித்து அதனுடைய சாறை எடுத்து காலை மற்றும் மாலை இரண்டு அவுன்ஸ் வீதம் ஏழு நாட்களுக்கு கொடுக்க மஞ்சள் காமாலை குணமடையும்.
 
கல்லீரல் வீக்கம் அடைந்த குழந்தைகளுக்கு இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு அரைத்து மோரில் கரைத்து கொடுத்துவர ஈரல் வீக்கம் குறையுமாம்.
 
மதவிடாய் காரணமாக பெண்களுக்கு இரத்த போக்கு அதிகமாக இருக்கும் காலங்களில் கரிசலாங்கண்ணியின் இலைய வேகவைத்து அதை வடிக்கட்டி காலை மற்றும் மாலை இரண்டு அவுன்ஸ் குடித்துவர நல்ல பலனை காணலாம்.
 
கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் தேங்காய் எண்ணையைக் கலந்து அடுப்பில் இட்டு சூடேற்றி அந்த எண்ணையை தலைக்கு தடவிவர முடி கருத்து நரை ஏற்படுவது மற்றும் முடி உதிர்வதை தடுக்கும் வல்லமை கொண்டது.


இதில் மேலும் படிக்கவும் :