வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கொய்யா பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...!!

கொய்யா பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, வைட்டமின் எ, மெக்னீசியம், வைட்டமின் பி6, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.
கொய்யா பழத்தில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் கொய்யா பழத்தில் கிட்டத்தட்ட 5 கிராம் அளவுக்கு நார்சத்து நிறைந்துள்ளது. உங்கள் உடல் எடையினை குறைக்க முக்கிய பங்கு வகிப்பது நார்சத்து நிறைந்த உணவுகள் ஆகும்.
 
கொய்யா பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். மேலும் உங்களின் குடல்  ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும்.
 
கொய்யா பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் நீங்கள் எடுத்துக்கொள்வதால் இரத்த சோகை போன்ற பிரச்சினை வராமல் காக்கும். மேலும் உங்கள் உடலில் இரத்த உற்பத்தியினை அதிகரிக்கும்.
 
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் கொய்யா பலத்தினை உண்டு வந்தால் அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவு சீரடையும். கொய்யா பழத்தினை அதிக அளவு உட்கொண்டு வந்தால் உங்களின் செரிமான மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.
 
கொய்யா பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இதனை தினமும் உண்டு வரும்போது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்கும்.
 
கொய்யா பழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவற்றை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் உடல் எப்பொழுதும் இளமையாக இருக்கும்.
 
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உங்களுக்கு புற்று நோய் வராமல் காக்க உதவுகின்றது. தினமும் ஒரு கொய்யா பலத்தினை உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிக குறைவு.
 
கொய்யா பழத்தில் சிறந்த அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவற்றை தினமும் நீங்கள் உட்கொண்டு வரும்பொழுது உங்கள் இரத்த அழுத்தமானது கட்டுக்குள் இருக்கும்.