முடி அதிகமாக உதிர்வதற்கான காரணம் என்ன....?

Hair Loss
Sasikala|
அண்மையில் குழந்தை பிறந்திருந்தாலும் அக்காலத்தில் ஏற்படுகிற ஹோர்மோன் மாற்றங்களாலும் முடி உதிரக் கூடும். தலையில் பங்கஸ் தொற்று நோய் போன்ற சரும நோய்கள் இருந்தாலும் அதிகமாக முடி உதிரும். தொற்று நோயல்லாத வேறு சரும நோய்களாலும் முடி  உதிரலாம்.
உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், மூட்டு நோய்கள், மனச்சோர்வு போன்ற நோய்களுக்கு உபயோகிக்கும் சில மருந்துகளும் முடி  உதிர்தலை அதிகரிக்கும்.
 
மிக நெருக்கமான பற்களை உடைய சீப்புகளைத் தவிர்த்து சற்று அதிக இடைவெளி உடைய பற் சீப்புகளை உபயோகியுங்கள். இறுக்கமான  பற்கள் உடைய சீப்புகள் முடிகளை இழுத்து பிடுங்கிவிடவும் வாய்ப்புண்டு.
 
முடியை அலங்கரிக்கும் போது மிக இறுக்கமாக முடியைக் கட்டுவதும் கூடாது. இறுக்கமான பின்னல் இறுக்கமான போனி ஸ்டைல் போன்றவற்றை தவிர்த்து சற்று தளர்ச்சியாக முடியைச் சீவி கட்டுவது நல்லது.
 
உங்கள் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை எனில் முடி அதிகமாக உதிரக் கூடும். தைராய்டு என்பது நமது கழுத்துப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. தைரொக்சின் ஹோர்மோனை சுரக்கும். இது குறைவாக சுரந்தால் எடை அதிகரிப்பு, மாதவிடாய்க் குழப்பங்கள்,  சோம்பேறித்தன்மை, முடி உதிர்தல் போன்ற பல அறிகுறிகள் தோன்றலாம்.
 
இரத்த சோகை, போசாக்கு குறைபாடு போன்றவையும் காரணமாகலாம். எனவே விட்டமின்கள், இரும்புச் சத்து, புரதம் போன்ற சத்துக்கள் உள்ள  மீன், கீரை, பருப்பு, பயறு வகைகள், காய்கறி பழவகைகள் உள்ளடங்கிய போசாக்கு உணவுகளை உண்பது அவசியம்.


இதில் மேலும் படிக்கவும் :