வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தேங்காயினை தினம்தோறும் சாப்பிட்டுவருவதால் கிடைக்கும் நன்மைகள் !!

அதிக அளவில் ஊட்டச்சத்து உள்ள இயற்கை உணவான தேங்காயினை தினம் தோறும் சாப்பிட்டுவந்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் எராளம்.

தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. தினமும் காலையில் சிறிதளவு தேங்காயை மென்று என்பதால் உடலுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிடைத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவடைய செய்கிறது.
 
ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படாமல் இருப்பதற்கு தேங்காயில் உள்ள வேதிப்பொருட்கள் எலும்புகளை வலிமைப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இது பற்களுக்கு பளபளப்பு தன்மையை கொடுக்கின்றது.
 
சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் முகப்பரு, தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய ஒரு மிக சிறந்த இயற்கை மருந்தாக உள்ளது.
 
தோலின் தோற்றமானது பளபளப்பு தன்மையுடன் இருப்பதற்கு நாள்தோறும் சிறிதளவு தேங்காயினை மென்று சாப்பிட்டு வர வேண்டும்.
 
தேங்காயில் புரதம் மற்றும் செலீனியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப் பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
 
தேங்காயில் இருக்க கூடிய கொழுப்பு மற்றும் எண்ணெய் இரத்தத்தில் கலந்து பளபளப்பான தோற்றத்தினை கொடுக்கும்.சுருக்கங்களை போக்கி இளமை தோற்றத்தை தருகிறது.
 
தேங்காயினை பச்சையாக நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலமாக நார்ச்சத்தானது முழுமையாக நமக்கு கிடைக்கின்றது. அதுமட்டுமில்லாமல் செரிமானத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் என்சைம்களின் உற்பத்தியினை அதிகரிக்கின்றது.