செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும் ஆவாரம் பூ தேநீர் !!

ஆவாரம் பூக்களை போட்டு வேக வைத்த தண்ணீரை காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வெகு விரைவில் நீங்கும். 

சிறுநீரக தொற்று பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் சிறுநீரக தோற்று நோய் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் உடலில் இருந்து அவ்வளவு சுலபத்தில் நீங்காது. ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவிலிருந்து செய்யப்படும் ஆவாரம் பூ ஜூசை அருந்தி வந்தால் சிறுநீரக தொற்று நோய்கள் விரைவில் நீங்கும்.
 
ஆவாரம் பூ நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் சிறந்த பணியாற்றுகிறது. ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார். இத்தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
 
ஆவாரம் பூக்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேறும். அதோடு வயிறு சம்மந்தமான நோய்களும் குணமாகும். 
 
ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் காக்கும்.