திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (18:14 IST)

கொத்தமல்லி விதைகளை கொண்டு தேநீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் !!

Coriander Tea
தனியாவை தேனீராக தினமும் அருந்துவது நமக்கு முழுமையான பயன்களை தரும். நீரிழிவு தொந்தரவு இருப்பவர்கள் 10 கிராம் அளவு தனியாவை தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை அருந்தினால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.


தனியாவை தேநீராக தயாரிக்கையில் 20 தனியாவை இரவு முழுக்க ஊறவைத்து காலையில் அந்த தண்னீரில் தேவையான அளவு தேயிலை, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவைத்து இனிப்புச் சுவைக்காக நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் போன்ற ஏதேனும் ஒன்றினைக் கலந்து தேநீராகத் தயாரித்து அருந்தலாம்.

விட்டமின் சி, பொட்டாசியம், கனியுப்புக்கள் போன்றவை தனியாவில் அதிகமாக உள்ளடங்கியுள்ளன. கொத்தமல்லி விதையை தேனீராக தினமும் காலையில் அருந்தி வரலாம். இதன்மூலம் வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றுகிறது. வாயு மட்டுமல்லாது சளி, இருமல், தலைவலி, இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள் முதலான பல நோய்களை போக்க வல்லது.

கொத்தமல்லி விதை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். மேலும் அலர்ஜி சார்ந்த பிரச்னைகள், உடல்வலி, மாதவிடாய் மற்றும் ஹைப்பர் டென்ஷன் பிரச்னைகளுக்கு அருமருந்தாக இருக்கிறது. ஹோர்மோன் சமநிலைக்கும் மல்லி விதை உதவி செய்கிறது.