எலுமிச்சை சாற்றை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் என்ன நன்மைகள்...?
ஒவ்வொரு வீட்டிலும் எலுமிச்சையின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சமயலறையில், பூஜை அறையில், மருத்துவத்துறை போன்ற அனைத்து இடத்திலும் எலுமிச்சையின் பயன்பாடு அதிக அளவில் நிறைந்துள்ளது.
எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. எலுமிச்சையில் வைட்டமின் C மட்டுமல்லாது ஆண்டி ஆக்ஸிடண்ட், ஆண்டி வைரல், ஆண்டி பாக்டீரியல் என பல வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. உடலின் pH அளவை சீராக்கி சமநிலைப்படுத்துவதால் சளி மற்றும் இருமலுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை, நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் சிறிதளவு எலுமிச்சைச்சாறு அருந்தலாம். இவ்வாறு குடித்து வந்தால் வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி போன்றவை குணமடையும்.
சிறுநீர் மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய எலுமிச்சை பயன்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது. எலுமிச்சை பழத்தை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் பித்தத்தினால் ஏற்படும் பாதிப்பு குறையும். ஒற்றைத் தலைவலி, வாந்தி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். எலுமிச்சை பழத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும், எலும்பு தேய்மானம் அடையாமல் இருக்கவும் பயன்படுகிறது. எனவே அடிக்கடி எலுமிச்சை சாறு கலந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சை பழ சாறினை நேரடியாக அருந்தக்கூடாது. எலுமிச்சை அமிலத்தன்மை நிறைந்த பழம் என்பதால் எப்போது அருந்தினாலும் சிறிதளவு தண்ணீருடன் கலந்து தான் குடிக்க வேண்டும்.