வறண்ட சருமத்தை சரியாக்க உதவும் அழகு குறிப்புகள் !!
பசும்பால், பாசிப் பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்மதூரி ஞ்சள் கலந்து முகத்தில் தடவுவதால் முகச்சுருக்கம் சரியாகும். முகம் பொலிவு பெறும்.
பாசிபயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு கலந்த மேற்பூச்சாக பயன்படுத்துவதால் வேர்க்குரு கொப்புளங்கள் சரியாகும். முல்தானிமெட்டி பவுடர், பன்னீர் அல்லது வெள்ளரிக்காய் சாறு கலந்து தடவுவதால் வேர்க்குரு, கொப்புளங்கள் கட்டிகள் சரியாகும்.
வறண்ட சருமம் சரியாக, தேன், பாலுடன் குங்குமப்பூ சிறிது கலந்து முகம் உடலில் தடவி குளிப்பதால் முகம் பளபளக்கும். எண்ணெய் வழியும் சருமத்திற்கு பாலில் குங்குமப்பூ கலந்து தடவி குளிப்பதால் சரியாகும்.
எண்ணெய் முகம் உள்ளவர்கள் தக்காளி ஜூஸை தொடர்ந்து தடவி வரலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.
சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப் பாகச் செயல்படுகின்றன. தயிர், வெண்ணெய் போன்றவற்றையும், சாதம் வடித்த கஞ்சியுடன் பாலையும் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்க மாகும்.
பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து வந்தால், சொர சொரப்பான சருமம் மிருதுவாகும். இந்த பேக் முகத்தில் உள்ள ஈரப்பசையை தக்கவைக்கும்.