செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் சோர்வடையாமல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறதா பீன்ஸ் !!

பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. இது உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது.

தினமும் உணவில் பீன்ஸ் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
 
பீன்ஸ் காய்கறியும் இதயத்திற்கு செல்லும் நரம்புகளை வலுப்படுத்தி ரத்தம் சீராக செல்வதற்கு வழிவகுக்கிறது. இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
 
குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணிப் பெண்களுக்கு உடலுக்கு தேவையான சத்தினை பீன்ஸ் கொடுக்கிறது. உடல் சோர்வடையாமல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
 
பீன்ஸ் ரத்த ஓட்டத்தை சீராக்கி உடம்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி புரிகிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைபட்ட நீக்கி ரத்தசோகையை குணப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் இருக்கும் நச்சுப் பொருள்களையும் நீக்கி, சுத்திகரிப்பு செய்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
 
பீன்ஸ் காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால், அது இரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
 
ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைபாடுகளால் இரத்தச் சோகை ஏற்படுகிறது. இரத்தச் சோகை இருப்பவர்கள் பீன்ஸ் காயை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சோகை நீங்கி உடலை மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு திரும்புகிறது.