வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி!!

தினமும் நீங்கள் குடிக்கும் தேநீரில் சில துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால் ருசியும் மணமும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். மேலும் துளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். 
துளசியில் வைட்டமின் சி மற்றும் ஆண்டி-ஆக்ஸிடண்ட் இருப்பதால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை சரிசெய்கிறது. தினமும் சில துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
துளசியை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி மற்றும் ஆர்த்திரிட்டிஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். துளசியில் தேநீர்  தயாரித்து குடித்து வந்தால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
 
சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமை, பருக்கள் போன்ற சரும பிரச்னைகளை போக்கிவிடும். துளசி எண்ணெய்யை சரும பராமரிப்பிற்கு  பயன்படுத்தலாம். 
 
நீரிழிவு நோயாளிகள் துளசியை அடிக்கடி உட்கொள்ளலாம். டைப் 2 நீரிழிவு நோயை தடுக்கும் தன்மை துளசிக்கு உண்டு. அதிகபடியாக சுரக்கும் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய அனைத்தையுமே கட்டுப்படுத்துகிறது. 
 
தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய  கோளாறுகள் நீங்கும்.