திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் ஆரோக்கியம் பெற இயற்கை மருத்துவ குறிப்புகள்...!!

நல்ல குரல் வளம் கிடைக்க ஆடாதொடையின் இலையை சிறிது சிறிதாக நறுக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் ஆகும் வரை காய்ச்சி,  சிறிது தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
நாக்கில் ஏற்படும் எல்லாவிதமான குறைப்பாடுகளையும் துளசி தீர்த்துவிடும். நாக்கில் சுவையின்மை இருந்தால் அதையும் போக்கவல்லது. நாக்கு புண்ணாக இருந்தால், 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி இலேசாக கொப்பளித்து விழுங்கவும்.
 
பல்வலி வந்தால் ஒரு பூண்டை உரித்து, மணிக்கட்டில் நாடித்துடிப்பு இருக்கும் இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும். இடது பக்கம் பல்லில் வலி இருந்தால் வலது புற மணிக்கட்டிலும், வலது பக்கம் பல்லில் வலி இருந்தால் இடது மணிக்கட்டிலும் கட்டுப் போட வேண்டும்.
 
தொண்டைப்புண் சரியாவதற்கு சுடுநீரில் உப்பு போட்டு 1 நாளைக்கு 2 அல்லது 3 தடவை கொப்பளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 தடவை 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் தொண்டைப்புண் ஆறும். மேலும் உப்பு, தயிர், வெங்காயக் கலவை தொண்டைப் புண்ணை ஆற்றும்.
 
தொண்டையில் ஏற்படும் நோய்களை தேன் குணப்படுத்தும். தேன் கிருமிநாசினியாக வேலை செய்யும். தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும் சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் கடவ வேண்டும்.
 
நுரையீரல் நோய்களுக்கு வெற்றிலைச் சாறு நல்லது. நுரையீரல் கப நோய் நீங்க, தேவையான தூதுவளை, முசுமுசுக்கை இலைகளை சுத்தம் செய்து, இத்துடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நெய்யில் வதக்கி துவையலாக அரைத்து, சூடான சாதத்தில் சேர்த்து  சாப்பிட வேண்டும்.
 
தினமும் காலையில் 5 சின்ன வெங்காயம் 1 பூண்டு சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு நல்லது. காரட் சாறு குடித்தால் இதயத்திற்கு நல்லது. அதில் பெருமளவு கரோட்டின் உள்ளது.
 
பேரீச்சம் பழத்தைத் தேனில் 3 நாட்கள் ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 வீதம் 3 வேளை சாப்பிட்டால், இதயம் மற்றும் மூளை நரம்புகள்  வலிமை பெறும் இரத்தம் ஊறும்.