1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

இயற்கையான முறையில் வீட்டிலேயே விரைவில் முடி வளர்வதற்கான வழிமுறைகள் !!

புரோட்டின் நிறைந்த உணவு: கோழி இறைச்சி, முட்டை, பால், சீஸ், கொட்டை வகைகள், தயிர் இவைகளை தொடர்ந்து நீங்கள் எடுத்து வரும் பொழுது இதில் இருக்கக்கூடிய புரதங்களின் சிறந்த மூலங்கள் உங்களுடைய முடியை மிக வேகமாக வளரச் செய்யும்.

சோற்றுக்கற்றாழை: சோற்றுக் கற்றாழையை உங்களுடைய தலையில் தேய்க்கும் பொழுது உங்களுடைய தலைமுடியின் வேர்க்கால்கள் வரை படும்படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து ஒரு பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு அதன் பிறகு தண்ணீரால் அலசி விடுங்கள். அலசிய பிறகு ஷாம்பு தேய்க்க கூடாது. தொடர்ந்து இதை செய்து வரும் பொழுது முடி மிக வேகமாக வளர ஆரம்பிக்கும். 
 
இரண்டாவதாக சோற்றுக்கற்றாழை சாற்றை வாரத்தில் இரண்டு நாட்கள் குடித்து வர வேண்டும். இதை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்களுடைய முடி மிக வேகமாக வளர ஆரம்பிக்கும்.
 
பாதாம் மற்றும் வாழைப்பழ கலவை:  பாதாமில் அதிக அளவில் இருக்கக்கூடிய புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. பாதாமில் காணப்படக்கூடிய வைட்டமின் ஈ கெரட்டின் உற்பத்தியை அதிகப்படுத்தும். அதன் மூலமாக சேதமடைந்த மூடியை சரி செய்து முடி உதிர்வதையும் குறைக்கிறது. 
 
வாழைப்பழங்கள் நம்முடைய தலை முடி வளர்வதற்கான அதிக அளவு கால்சியம் மற்றும் ஃபோலிக் அமிலங்கள் கொடுக்கிறது. இந்த வாழைப்பழம் மற்றும் பாதாம் கலந்த பானமானது தொடர்ந்து குடித்து வரும் பொழுது முடி வேகமாக வளர உதவுகிறது.
 
பார்லி: பார்லியை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் அதை நன்றாக வேக வைக்க வேண்டும். இந்த தண்ணீரை ஆறவைத்து இதனுடன் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். தொடர்ந்து இந்தத் தண்ணீரை குடித்து வரும்பொழுது முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து முடியை வேகமாக வளர செய்யும்.