இத்தனை சத்துக்களும் ஒரே பழத்தில் உள்ளதா....?
ஆரஞ்சு பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்து ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாக உருதுணையாக உள்ளது. இதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கின்றன.
ஆரஞ்சு பழத்தை அதிக அளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் ஏற்படுவது மிக குறைவு. இதற்கு காரணம் அதில் உள்ள சிட்ரிக் ஆசிட் எனும் அமிலமாகும். உடலில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்பினை கரைத்து வெளியேற்ற பெரிதும் பயன்படுகிறது.
ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. ஜீரண சக்த்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடும் முன் ஆரஞ்சு பழத்தை ஜூஸாக குடித்து வருவது நல்லது.
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அமுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் பாதுக்கிறது. முடி கொட்டுவது குறைந்து முடியின் வளர்ச்சியை அதிபடுத்துகிறது.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.