செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருத்துவகுணங்கள் நிறைந்து காணப்படும் சோம்பு...!!

பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். உண்ணும் உணவை ஜீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.

இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் சார்ந்தது. வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
 
எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.
 
சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.
 
அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.
 
கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப்படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து  நோய்களும் விலகும்.