1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Do you know what are the foods that can help eliminate neurological problems...?

நரம்பு தளர்ச்சி பிரச்சனைகளை நீக்க உதவும் உணவுகள் எவை தெரியுமா...?

நரம்பு தளர்ச்சி பிரச்சனை
நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை பழத்தை அதிகம் சாப்பிடுங்கள். மாதுளை பழம் உடல் சூட்டை தனித்து, உடலை வலுப்படுத்தும், நரம்பு  தளர்ச்சியை சரி செய்யும்.

நெல்லிக்காயில் உடலை வலுப்படுத்தும் அனைத்து சக்திகளும் உள்ளது. நெல்லிக்கனியை தினமும் சாப்பிடுவதினால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும். மேலும்  உடலுக்கு எந்த ஒரு நோய்களும் ஏற்படாது.
 
இரண்டு அல்லது மூன்று வெற்றிலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட நன்கு பசியெடுக்கும். எந்த ஒரு செரிமான பிரச்சனைகளும் ஏற்படாது. உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி வெற்றிலைக்கு உண்டு.
 
முருங்கைகீரைக்கு பொதுவாக உடலை வலுப்படுத்தும் சக்தி அதிகம் உண்டு. பலவிதமான நோய்களுக்கு கண்கண்ட மருந்து, உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும். முருங்கை கீரையை சமைக்கும் போது அதனுடன் சிறிதளவு முருங்கை பூவை சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதனால் நரம்புகள் வலுப்படும். 
 
பேரிச்சை பழத்துடன் பால் கலந்து தினமும் சாப்பிட்டு வர உடல் வலுப்பெறும். நரம்புகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும், தேறாத உடல் கூட பேரிச்சையுடன்  பால் கலந்து சாப்பிடு வர தேறும். பலவீனமான உடல் கூட பலம் பெரும்.
 
உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி பிரண்டைக்கு உண்டு. பிரண்டையை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதினால் நரம்பு சம்பந்தமான அனைத்து  பிரச்சனைகளும் சரியாகிவிடும்.
About Writer
Sasikala