1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Amazing Tips to Help Cure Gas trouble !!

வாயுத்தொல்லையை குணமாக்க உதவும் அற்புத குறிப்புகள் !!

வாயுத்தொல்லை
சீமை சாமந்தி டீ: சீமை சாமந்தி டீ பேக் வாங்கி தண்ணீரில் தேநீர் தயாரித்து குடித்தால், வாய்வுத் தொல்லை வராமல் தடுக்கும். வந்தாலும் உடனடி நிவாரணம்  தரும்.

வாழைப்பழம்: வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் கட்டுப்படுத்திவிடும்.
 
தேங்காய்: தேங்காய் துருவலை சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிறது. இவை ஜீரண உறுப்புகளை ஆசுவாசப்படுத்தி அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.
 
புதினா இலைகள்: புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா  எண்ணெய்யை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.
 
மிளகு சூரணம்: மிளகை பொடி செய்து 50 கிராம் எடுத்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி, கால் டம்ளர் அளவு என  மூன்று வேளை அருந்தினால் வாயுத் தொல்லை குணமாகும்.
 
சுக்கு காபி: சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும். காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
அடிக்கடி கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...?