வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (14:18 IST)

வாழை இலையில் உணவு.. ஓஹோனு உடலு...!

வாழை இலையில் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.... 
 
வாழை இலையில் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கண்பார்வை குறைபாடுகள் ஏதும் ஏற்படாது.
 
உணவு உண்டு வந்தால் நமது செரிமான மண்டலம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். 
 
அல்சர் மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வாழை இலையில் உணவு உண்டு வந்தால் விரைவில் நல்ல மற்றம் காண முடியும்.
 
வாழை இலையில் பலிபீனால்ஸ் என்னும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதில் நாம் உணவினை உண்டு வரும்பொழுது நமக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும்.
 
வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்டநாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
 
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல்நலம் பெறும்.
 
மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
 
வாழை இலையின் மேல் உள்ள பச்சைத்தன்மை உணவை எளிதில் ஜீரணமடையச் செய்வதுடன் நன்கு பசியைத் தூண்டும்.