1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Amazing Natural Remedies to Cure Hair Problems !!

தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

தலைமுடி பிரச்சனை
கூந்தல் நரை மறைய வேண்டுமானால், தினமும் வெண் தாமரைப்பூ கஷாயம் செய்து, அரை டம்ளர் வீதம் 40 நாட்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.

மருதாணி இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, நன்கு அரைத்து தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி மிருதுவாக இருக்கும். உடல் சூடும் குறையும்.
 
நெல்லி இலையையும், இலந்தை இலையையும் மை போல் அரைத்து தலையில் தடவி பத்து நிமிடம் காயவிட்டு குளித்தால், தலைமுடி நரைப்பது நிற்கும். மேலும் நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இளநரை கருமை நிறத்திற்கு மாறும். முடியும் செழுமை பெறும்.
 
கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேவையான தேங்காய் எண்ணெய் யில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தாலும் கூந்தல் செழித்து வளரும்.
 
முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வர, நரை நீங்கும். முளைக்கீரையை நன்கு உலர்த்திப் பொடி செய்து தினசரி அரை ஸ்பூன் சாப்பிட்டும் வரலாம். நரை விலகும்.
 
செம்பருத்திப் பூக்களைப் பறித்து வந்து, காம்பை நீக்கி சுத்தம் செய்து தேவையான தேங்காய் எண்ணெய்யில் கசக்கிப் போட்டு, சடசடப்பு நின்றதும் இறக்கி வைத்து, ஆறிய பின் பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொண்டு தினமும் தடவி வந்தாலும் முடி செழித்து வளரும். முடி உதிர்வதும் நின்றுபோகும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவர உதவும் ரணகள்ளி மூலிகை !!